Saturday, 4 June 2011

STC 1st Brainstorming Meeting (5.6.2011)

வணக்கம்,

பொன்னான உங்கள் நேரத்தை நம் சமுதாய முன்னேற்றத்திற்கு செலவிட வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எங்கள் முதற்கண் வணக்கம்.

Indians-Sg@yahoogroup  என்ற மடல் குழுவில் சிங்கை வாழ் இந்தியர்களின் கல்வி, சமுதாயம், பண்பாடு, வாணிகம், மொழி முதலியவை பற்றி ஆய்ந்து அலசப்பட்டுள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பல சாதனைகளைச் சாதித்துள்ளது.  அவை அனைத்திற்கும் இன்றைய முயற்சி மகுடம் வைத்ததுபோல அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதிலிருந்து அனுப்பப்படும் மடல்கள் உறுப்பினர்களை மட்டுமே சென்றடையும்.

பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் சில மிக உன்னதமான பணிகளைச் செய்து வருகின்றன. அதைப்போல மற்ற பல சங்கங்களும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

நமது சமுதாயத்திற்குப் பல சவால்கள் முளைத்துள்ளன. அவற்றை நாம் நமது ஒற்றுமையினால் எளிதில் வெல்லமுடியும். நமது அரசு உலகத்தில் மிகச்சிறந்தவற்றுள் ஒன்று. நம் மொழிக்கு வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெருமை கிடைப்பதாக தெரியவில்லை. இருப்பினும் அந்த பெருமை அழியாமல் காப்பது நம் கையில்தான் இருக்கிறது.

இந்த சங்கங்களை ஒன்று கூட்டி கருத்துபரிமாற்றங்கள் செய்து கொள்ள இன்றைய நிகழ்ச்சி மிகவும் உதவும் என்று நம்புகிறேன்.

நன்றி
மாகோ

No comments:

Post a Comment