சிங்கப்பூரின் இந்து ஆலயங்களுக்கான வட்ட மேசைக் கூட்டம் கடந்த 21.8.2011 ஞாயிற்றுக்கிழமை சிண்டாவில் நடைபெற்றது. சிங்கப்பூர் தமிழ் சங்கம் எனும் இணைய தள அமைப்பு, குவின்சுவே முனீசுவரன் ஆலய உதவியுடன் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. கேப்டன் மாகோவிந்தராசு (Administrator, STC) தலைவராகவும், திரு தேவராஜ் (தலைவர், குவுன்சுவே முனீசுவரன் ஆலயம்) இணைத்தலைவராகவும் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தில் ஆலயங்களின் சமுதாயப் பணி சார்ந்த பல ஆக்ககரமான திட்டங்கள் முன் வைக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்து ஆலயங்களும் தாங்களால் ஆன அளவு மக்களுக்குப் பல பணிகள் செய்து வருகின்றன. எனினும் இன்னும் அதிக சமூகப்பணிகள் ஆற்றப்படவேண்டும்; இளையர்களுக்கும், வாழ்க்கையில் பின தங்கியுள்ளோர்களுக்கும் மேலும் இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வேட்கை அனனவரிடமும் மேலோங்கியது. இப்பணிகளை ஒன்றிணைத்து சீரான வழியில் மக்களைச் சென்றடைய ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தும் வலுப்பட்டது.
எதிர்காலத்தில் சிங்கப்பூர் தனியார் ஆலயங்களை ஒன்றிணைக்கும் கூட்டு அமைப்பு ஒன்றினை உருவாக்கும் திட்டம் முன்னுரைக்கப்பட்டது. அல்லது மேல்வாரியாக ஆலயங்களின் பணிகளை ஒன்றிணைக்க தற்காலிக முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றம் முடிவுசெய்யப்ப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஓர் ஆலயம் எல்லா ஆலய பணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
STC எனும் தமிழ்ச்சமூக இணைய தள அமைப்பு ஆலயங்களின் திட்டங்களை, பணிகளை பல்வேறு ஊடக வழி மக்களைச் சென்றடைய உதவி செய்யும்.
ஆலய பணிகளில் இளையர்களை ஈடுபடுத்தி அவர்களின் கல்வி, விளையாட்டு மேன்மைக்காகவும்; சமய கல்விக்காகவும் பாடுபடவேண்டிய அவசியத்தை அனைவரும் வலியுறுத்தினர்.

திரு ராஜசேகர் அவர்கள் தன் உரையில் சிண்டாவுடனான ஆலயங்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை விளக்கினார். வாழ்க்கையில் துன்பப்படும் பக்திமான்கள் ஆலயத்தையே அணுகுகின்றனர். ஆகவே ஆலயங்கள் அவர்களுக்கு தேவையான உதவியை அளித்திடும் முக்கிய இடமாக இருக்கும். சிண்டாவின் FSC எனப்படும் 'குடும்ப நலப் பிரிவு', குடும்ப தேவை, கல்வி போன்ற வேண்டிய உதவிகள் செய்ய காத்திருக்கிறது. உதவி தேவையானவர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள CDC எனும் அமைப்பும் பேருதவி அளிக்கும்.
ஆலயங்கள் நம் சமுதாயத்தை முன்னேற்ற அவற்றின் பெருந்தூண்களாக அமைந்து; மக்களின் அசையாத தளமாகி தம் பணிகளை ஒருங்கிணைத்து வெற்றி நடை போட உறுதி மேற்கொண்டன.
இதன் தொடர் கூட்டம் எதிர்வரும் 20.11.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை தர்ம முனீசுவரன் ஆலயத்தில, அதன் தலைவர் திரு காளிமுத்து அவர்களின் தலைமையில் நடைபெறும்.